விதிகளை மீறி பட்டாசு தயாரித்தவர் கைது

விதிகளை மீறி பட்டாசு தயாரித்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-15 18:55 GMT

சிவகாசி, 

சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயசண்முகநாதன் மற்றும் போலீசார் சொக்கலிங்கபுரம் பகுதியில் ரோந்து வந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பட்டாசு ஆலையில் விதிகளை மீறி இரவு நேரத்தில் பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பட்டாசு ஆலைக்குள் சென்று பார்த்தபோது அங்கு முதலிப்பட்டி சதானந்தபுரம் பகுதியை சேர்ந்த வரதராஜன் (வயது37) என்பவர் விதிகளை மீறி பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அங்கிருந்த முழுமையாக தயாரிக்கப்படாத 6 பெட்டி பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து வரதராஜனை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்