வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
எருமப்பட்டி அருகே முட்டாஞ்செட்டியை சேர்ந்த நல்லுசாமி மகன் பாலாஜி (வயது21). இவர், தனது வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தனர். அங்கு மூட்டை, மூட்டையாக இருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனை பதுக்கி வைத்து இருந்ததாக பாலாஜியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மொபட் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.