ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவர் கைது

தென்காசியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-23 18:45 GMT

தென்காசியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக நெல்லை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீசார் நேற்று தென்காசி பறையடி தெரு பகுதிக்கு சென்றனர். அங்கு ஒரு வீட்டில் 40 மூட்டைகளில் 1,400 கிலோ ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து இருந்த அதே பகுதியை சேர்ந்த சித்திக் அலி (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்