முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது

முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-03 18:30 GMT

பெரம்பலூர் ரெங்கநகரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது 34). இவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும், முன்னாள் டி.வி. செய்தி வாசிப்பாளர் ஒருவரது படத்தையும் இணைத்து அவதூறு செய்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பெரம்பலூர் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சுதா கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்