கைதான விவசாயி மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு
கைதான விவசாயி மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை மேலப்பாளையம் அருகே கருங்குளம் பகுதியில் நேற்று முன்தினம் நாய்கள் பல மர்மமான முறையில் இறந்துகிடந்தன. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 47) என்ற விவசாயி 9 நாய்களுக்கு விஷம் வைத்து சாகடித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அந்த விவசாயி மீது மிருகவதை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.