ஆத்தூரில் கைதான ஆயுதப்படை போலீஸ்காரர் பணி இடைநீக்கம்

ஆத்தூரில் கைதான ஆயுதப்படை போலீஸ்காரர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2022-09-09 13:53 GMT

தூத்துக்குடி அருகே உள்ள ஆத்தூர் ஆவரையூரை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மகன் மாகாளிராஜா (வயது 27). இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருக்கும் அந்த பகுதியை சேர்ந்த காசிவிசுவநாதன் மனைவி ஷோபனா (29) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீஸ்காரர் மாகாளிராஜா, ஷோபனா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பொருட்களை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்து உள்ளார்.

இது குறித்த புகாரின் பேரில் ஆத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மாகாளிராஜாவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து மாகாளிராஜாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்