ஓசூர், சூளகிரியில்கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Update: 2023-07-01 19:45 GMT

ஓசூர் 

ஓசூர் டவுன் போலீசார், பாரதிதாசன் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது மேலும் விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த நாகேஷ் (வயது26) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதே போல், சூளகிரி அருகே கஞ்சா வைத்திருந்த பன்னப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்