கஞ்சா, குட்கா விற்ற 3 பேர் கைது

Update: 2023-06-28 19:45 GMT

ஓசூர்

பேரிகை போலீசார் மாருதி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக ஒரு வீட்டில் நேற்று சோதனை செய்தனர். அங்கு கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்த மணி (வயது 43) என்பவர் கஞ்சா பதுக்கி வைத்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.அதேபோல சிப்காட், மத்திகிரி பகுதிகளில் கடைகளில் குட்கா விற்பனை செய்த மூக்கண்டப்பள்ளி குருபிரசாத் (29), கொத்தகொண்டப்பள்ளி மாதேஷ் (37) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்