ஏரியூர்
ஏரியூர் அருகே மஞ்சநாயக்கன் அள்ளி 5-வது மைல் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் மனைவி சந்திரா (வயது 48). இவர் தனது பெட்டிக்கடையில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பெரும்பாலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் பெட்டிக்கடையில் சோதனை செய்தனர். அப்போது கடையில் குட்கா பதுக்கி விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுமதியை பெரும்பாலை போலீசார் கைது செய்தனர்.