ஓசூர்
ஓசூர் சிப்காட் மற்றும் மத்திகிரி போலீசார் மூக்கண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கடைகளில் சோதனை செய்தனர். மூக்கண்டப்பள்ளி ரமேஷ் (வயது55), கலுகொண்டப்பள்ளி சிவக்குமார் (40) ஆகிய 2 பேரும் குட்கா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் பழையபேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக வீரப்பன் நகரை சேர்ந்த மாதேஷ் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர்.