கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குட்கா, லாட்டரி விற்ற 7 பேர் கைது

Update: 2023-06-19 19:45 GMT

ஓசூர்

பேரிகை, சூளகிரி, பாரூர் பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற பாகலூர் பாஸ்கர் (வயது53), அத்திமுகம் நயாஸ் (37), கே.என்.தொட்டி நாகராஜ் (23), பேரிகை ரமேஷ் (23), புலியூர் மனோகரன் (48) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து குட்காவை பறிமுதல் செய்தனர்.

அதே போல தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த கிருஷ்ணகிரி பழையபேட்டை காமராஜ் (44), கெலமங்கலம் ஜீவா நகர் மாது (42) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்