ரெயிலில் கஞ்சா கடத்தல் - பெண் கைது
சேலம் வழியாக ரெயிலில் கஞ்சா கடத்திய பெண் கைது
சூரமங்கலம்
சேலம் ெரயில்வே போலீஸ் தனிப்படையினர் நேற்று தன்பாத்- ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ெரயிலில் ஜோலார்பேட்டை ெரயில் நிலையத்தில் இருந்து ஏறி தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பின்பக்க பொதுப்பெட்டியில் இருக்கையின் கீழே கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை எடுத்து போலீசார் பார்த்த போது அதில் 19 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், கஞ்சா கடத்தி வந்தது திருச்சியை சேர்ந்த விமலா (வயது 55) என்பதும், அவர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தியதாக வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. ரெயில்வே இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து கஞ்சா கடத்தியதாக விமலாவை கைது செய்தனர். 19 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.