சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது

வாழப்பாடி அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-23 20:00 GMT

வாழப்பாடி

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் கவுரி வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் மனு கொடுத்தார். அதில், கடந்த மாதம் 24-ந் தேதி சமூக நலத்துறைக்கு வந்த தகவலின் பேரில் நடத்திய விசாரணையில் வாழப்பாடி அருகே பேளூர் இரட்டை பனங்காடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தது தெரிய வந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த புகாரின் பேரில் ராமசந்திரன் (வயது 24) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியை மீட்டு சேலம் பெண்கள் காப்பகத்தில் சேர்த்தனர். 

மேலும் செய்திகள்