பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது
வேப்பனப்பள்ளியில் பணம் வைத்து சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேப்பனப்பள்ளி
வேப்பனப்பள்ளி போலீசார் தடத்தரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் பணம் வைத்து சூதாடிய பூதிமுட்லு பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 35), நவீன் (19) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.200-ஐ பறிமுதல் செய்தனர்.