பழனி பஸ் நிலையத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது

பழனி பஸ் நிலையத்தில் வாலிபரை கத்தியால் வெட்டிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-28 21:00 GMT

மதுரை சம்மட்டிபுரத்தை சேர்ந்தவர் அழகுமலை கண்ணன் (வயது 28). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் பழனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் ஊருக்கு செல்ல பழனி பஸ்நிலையத்துக்கு வந்தார். பஸ்நிலைய பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் நின்றபோது, அந்த பகுதியில் 2 பேர் தகாத வார்த்தையால் பேசிக்கொண்டிருந்தனர். இதனால் அழகுமலை கண்ணன் அவர்களை தட்டி கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த ஒருவர் தான் வைத்திருந்த கத்தியால் அழகுமலை கண்ணனை தாக்கினார். பின்னர் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு 2 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கத்தியால் வெட்டிய நபர்கள் பழனி கோதமங்கலத்தை சேர்ந்த பசுபதிபாண்டியன் (23), குட்டிமாசாணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்