சிறுமிக்கு பாலியல் தொல்லை; வாலிபர் உள்பட 2 பேர் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வாலிபர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெரியகுளம் தென்கரை பகுதியை சேர்ந்தவர் கார்னீஸ் (வயது 32). இவருக்கும், 17 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையே அந்த சிறுமிக்கு, கார்னீஸ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு சிறுமியின் தாய், கார்னீசின் தந்தை ராஜா, தாய் சின்னப்பொண்ணு ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர் பெரியகுளம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கார்னீஸ் அவரது பெற்றோர், சிறுமியின் தாய் ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில், கார்னீஸ் மற்றும் சிறுமியின் தாயை போலீசார் கைது செய்தனர்.