பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

பெரியகுளம் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-19 21:00 GMT

பெரியகுளம் தென்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபக் தலைமையிலான போலீசார் கைலாசப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள காளவாசல் அருகே சந்தேகப்படும் வகையில் 2 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில், அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 140 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில், அவர்கள் கைலாசப்பட்டியை சேர்ந்த சிவதேசிங்கு (வயது 25), நாகராஜபிரபு (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்