போலி டாக்டர்கள் 2 பேர் கைது

சேலம் சீலநாயக்கன்பட்டி, அன்னதானப்பட்டியில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-04-04 20:07 GMT

அன்னதானப்பட்டி

சேலம் சீலநாயக்கன்பட்டி, அன்னதானப்பட்டியில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

போலி டாக்டர்

சேலம் மாவட்டம் ஓமலூர் அரசு மருத்துவமனை டாக்டர் ஹெலன்குமார் மற்றும் மருத்துவக்குழுவினர் நேற்று முன்தினம் மாலை சீலநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அப்போது அங்கு தபாரங் ஆலம் (வயது 50) என்பவர் தன்னை எம்.பி.பி.எஸ். டாக்டர் என கூறிக் கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்ததாக தெரிகிறது.

இவர் பி.எஸ்சி. படித்து விட்டு பொதுமக்களுக்கு ஆங்கில முறையில் சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இவர் போலி டாக்டர் என்பதும் தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தபாரங் ஆலமை கைது செய்தனர். மேலும் அங்கிருந்த மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மருந்து, மாத்திரைகள் பறிமுதல்

இதேபோல, அன்னதானப்பட்டி புது திருச்சி கிளை ரோட்டில் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ஜெயராமன் (75) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவரது மருத்துவமனையில் இருந்தும் மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதேபோல் கருங்கல்பட்டி பகுதியை சேர்ந்த ஜெகநாதன் (60) என்பவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்