ஜாமீனில் வந்த ரவுடியை வெட்டிய 8 பேர் கைது

சேலத்தில் ஜாமீனில் வந்த ரவுடியை வெட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-04-03 20:41 GMT

சேலத்தில் ஜாமீனில் வந்த ரவுடியை வெட்டிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரவுடிக்கு அரிவாள் வெட்டு

சேலம் கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி. காலனியை சேர்ந்த ரவுடி சின்னவர் (வயது 23). அவரை பிரபல ரவுடியான செல்லதுரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த சின்னவர் ஓமலூரில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சின்னவர் கிச்சிப்பாளையம் பகுதிக்கு வந்தார். அப்போது அவரை 10 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அரிவாள் மற்றும் ஆயுதங்களால் வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில் படுகாயம் அடைந்த சின்னவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

8 பேர் கைது

இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரவுடியை அரிவாளால் வெட்டியை கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த துரைசாமி (22), பிரபு (24), வாசு (23), சக்தி (23), பிரதாப் (26), கோகுல் (24), மோகன் (23), வல்லரசு (23) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்