சிறுமியை பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தேனி அருகே போடேந்திரபுரத்தை சேர்ந்த ஈஸ்வரன் மகன் லிங்கேஸ்வரன் என்ற வினோத்குமார் (வயது 19). இவர், 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சிறுமியை காணாமல் பெற்றோர்கள் தேடினர். சிறுமி தனது வீட்டுக்கு வந்த போது, அவரிடம் அவருடைய தாயார் விசாரித்தார். அப்போது அவர் நடந்த விஷயத்தை கூறினார். அப்போது சிறுமியை கண்டிக்கும் நோக்கில் அவருடைய தாய் ஒரு கம்பால் சிறுமியை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் அவருடைய தலையில் காயம் ஏற்பட்டது.
சிகிச்சைக்காக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது அந்த சிறுமி 8-ம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தாகவும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதும் தெரியவந்தது. அதுதொடர்பாக சிறுமி அளித்த வாக்குமூலத்தின்பேரில் தேனி அனைத்து மகளிர் போலீசார் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லிங்கேஸ்வரன் என்ற வினோத்குமாரை கைது செய்தனர்.