பழ வியாபாரி மீது தாக்குதல்; உறவினர் கைது

சேலம் தாதகாப்பட்டியில் பழ வியாபாரி மீது தாக்குதல்; உறவினர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-04-02 20:06 GMT

அன்னதானப்பட்டி

சேலம் தாதகாப்பட்டி கேட் முதல் குறுக்குத்தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 23). பழ வியாபாரி. இவருக்கும், உறவினர் ராமு (38) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு பிரபாகரன், நண்பர்களுடன் தாதகாப்பட்டியில் பேசி கொண்டிருந்தார். அங்கு வந்த ராமுவுக்கும், பிரபாகரனுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ராமு இரும்பு கம்பியால் பிரபாகரனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமு என்கிற குண்டு ராமுவை நேற்று கைது செய்தனர்.

மேலும் செய்திகள்