போடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

போடியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-29 20:30 GMT

போடி டவுன் போலீசார் நேற்று நகர்ப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போடி புதூர் தேவர் சிலை அருகே சந்தேகப்படும் வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், அதே பகுதியை சேர்ந்த ஜோதிபாசு (வயது 35) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதிபாசுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்