ஓசூர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது40). பார்மசி படித்துள்ள இவர், ஓசூர் அருகே குமாரனபள்ளி என்ற கிராமத்தில் மருந்தகம் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, கலெக்டர் தீபக் ஜேக்கப் உத்தாவின் பேரில், ஓசூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி தலைமையில், மாவட்ட மருந்து கட்டுப்பாட்டு அலுவலர் ராஜீவ் காந்தி, குமாரனபள்ளி கிராம நிர்வாக அலுவலர் பழனி மற்றும் மத்திகிரி போலீசார் அடங்கிய குழு நேற்று அந்த மருந்தகத்தில் சோதனை நடத்தினர். அப்போது அவர் போலி டாக்டர் என்பது ெதரியவந்தது. இதையடுத்து அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர். மேலும் மருந்தகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.