பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
வருசநாட்டில் பிளஸ்-1 மாணவி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வருசநாடு பகுதியை சேர்ந்த ரவி மகன் தனுஷ் (வயது 19). கூலித்தொழிலாளி. இவரும், பிளஸ்-1 படிக்கும் 16 வயது மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்தநிலையில் தனுஷ், அந்த மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் இதுகுறித்து, மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுசை கைது செய்தனர்.