திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்லில், பழனி பைபாஸ் சாலையில் ஐ.ஜி. தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காமாட்சிபுரம் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில், அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆல்பர்ட் விஜய் (வயது 29) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் தனிப்படை போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மலைச்சாமி வழக்குப்பதிவு செய்து, கஞ்சா விற்ற ஆல்பர்ட் விஜய்யை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.