பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
மத்தூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.;
மத்தூர்
மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் அதேபகுதியை சேர்ந்த மாதேஷ், சுப்பிரமணி, மாரியப்பன், விநாயகமூர்த்தி, ராஜ்குமார், கேசவன் ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர்.