விவசாயியை தாக்கிய தொழிலாளி கைது

கந்திகுப்பம் அருகே விவசாயியை தாக்கிய தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-02-18 18:45 GMT

பர்கூர்

கிருஷ்ணகிரி அருகே உள்ள ராயக்கொட்டாயான் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன கோவிந்தன் (வயது50). விவசாயி. கந்திகுப்பம் அருகே உள்ள துளிகொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (40). தொழிலாளி. இவர்களுக்கு அருகருகே நிலம் உள்ளது. செல்வத்தின் மாடுகள் சின்ன கோவிந்தன் நிலத்தில் உள்ள பயிர்களை மேய்ந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது செல்வம், சின்னகோவிந்தனை தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில் கந்திகுப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்