லாரியை வழிமறித்து தகராறு; இருதரப்பிலும் 6 பேர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே லாரியை வழிமறித்து தகராறு செய்தது தொடர்பாக இருதரப்பிலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-02-12 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே அடவிசாமிபுரம் கிராமத்தில் உள்ள கல் குவாரிகளுக்கு ஜல்லிகற்கள் மற்றும் எம்.சாண்ட் ஏற்றி சென்ற டிப்பர் லாரிகளை நேற்று முன்தினம் அதேபகுதியை சேர்ந்த மஞ்சுநாத் (வயது27), ரமேஷ் (26), சீனிவாசன் (24) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் வழிமறித்து டிரைவர்களிடம் தகராறு செய்தனர். இதை தட்டிக்கேட்ட மதுகுமார் (24), இவரது தந்தை முனிராஜ்(50), ஜெகதீஸ் (38), சுனில்குமார் (24), பிரன்சிஸ்ராஜா (32) மற்றும் விசாரணைக்கு சென்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நாகபூஷணம் (51) ஆகியோரை மஞ்சுநாதன் மற்றும் அவரது நண்பர்கள் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மஞ்சுநாத், ரமேஷ், சீனிவாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அதே போல் மஞ்சுநாத் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் ஜெகதீஸ், சுனில்குமார், பிரான்சிஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்