தேனியில் சூதாடிய 3 பேர் கைது
தேனியில் சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி சடையால் கோவில் தெருவில் உள்ள காலியிடத்தில் சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தேனி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் அங்கு ரோந்து சென்றனர்.
அப்போது பணம் வைத்து சூதாடியதாக பங்களாமேடு பகுதியை சேர்ந்த நாகராஜ் (வயது 43), சிவராம் நகரை சேர்ந்த நாகேந்திரன் (40), சிவாஜி நகரை சேர்ந்த மணிகண்டன் (51) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 52 சீட்டுகள், ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.