சந்துக்கடைகளில் மது விற்ற 9 பேர் கைது

கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் சந்துக்கடைகளில் மது விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-01-20 18:45 GMT

கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் சந்துக்கடைகளில் மது விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1¾ லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசாருக்கு உத்தரவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சந்துக்கடைகளில் மது விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூருக்கு புகார் வந்தது. இதையடுத்து மது விற்பனையை தடுக்கவும், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், பிரபாகரன், முருகேஷ்வரன், ஜெய்கணேஷ், வனக்குமார், குணா, ரமேஷ்குமார், ஆனந்த்குமார், சவுந்தர்ராஜன், அனிதா, ஆனந்தன், சுந்தரேசன் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி டவுன், தாலுகா, கே.ஆர்.பி. டேம், குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் சோதனை நடத்தினர்.

9 பேர் கைது

அப்போது சந்துக்கடைகளில் மது விற்ற உதயசந்திரன் (வயது 38), வெங்கட்ராமன் (47), கோவிந்தம்மாள் (65), கோபிநாத் (25), உதயகுமார் (39), சக்திவேல் (32), ராம்மூர்த்தி (34), கெம்பு (35), சேட்டு (35) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்கள், 7 செல்போன்கள், 3 மோட்டார்சைக்கிள்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கூறுகையில், கைது செய்யப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டம் முழுவதும் இனி தொடர்ந்து மது விற்பனை நடைபெறுகிறதா? என கண்காணிக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்