குற்ற வழக்குகளில் தொடர்புடைய 25 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.;
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் உத்தரவிட்டார். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்தனர்.அந்த வகையில் ஓசூர், பாரூர், கிருஷ்ணகிரி, கெலமங்கலம், ராயக்கோட்டை, ஊத்தங்கரை, பாகலூர், பேரிகை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் குற்ற வழக்குகளில் ஜாமீனில் வந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து கொண்டிருந்த 25 பேரை போலீசார் கைது செய்தனர்.