கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

ஓசூரில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-07 18:45 GMT

ஓசூர்

கர்நாடகாவில் இருந்து கஞ்சா, குட்கா கடத்தலை தடுக்க ஓசூரில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது கஞ்சா வைத்திருந்ததாக ஓசூர் எழில் நகரை சேர்ந்த சாதிக் உசேன் (வயது 19) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது கஞ்சா விற்பனைக்காக வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்