நர்சிடம் ஜேப்படி செய்த பெண் கைது
ஓசூர் பஸ் நிலையத்தில் நர்சிடம் ஜேப்படி செய்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்,
கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஆர்.எஸ்.பாளையாவை சேர்ந்தவர் காயத்திரி (வயது 40). இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று மாலை ஓசூர் வந்திருந்த அவர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது அவரது அருகில் வந்த பெண் ஒருவர், காயத்திரியின் ஹேண்ட் பேக்கில் இருந்த ரூ.700-ஐ ஜேப்படி செய்ய முயன்றார். இதை கவனித்த காயத்திரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த பெண்ணை பிடித்து ஓசூர் டவுன் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம் காட்டுமடுகு கிராமத்தை சேர்ந்த அலமேலு (49) என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.