பழனி அருகே அரசு பஸ்சை சேதப்படுத்திய வாலிபர் கைது

பழனி அருகே அரசு பஸ்சை சேதப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-04 17:19 GMT

பழனியில் இருந்து கோவை நோக்கி, கடந்த 1-ந்தேதி இரவு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பழனி அருகே காரமடை பகுதியில் வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பஸ் மீது பாட்டிலை வீசிவிட்டு தப்பிசென்றனர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், நெய்க்காரப்பட்டியை அடுத்த அக்கமநாயக்கன்புதூரை சேர்ந்த ஈஸ்வரன் (வயது 23) மற்றும் அவரது நண்பர்களான அருண், செல்லத்துரை ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து ஈஸ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரின் நண்பர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்