எலக்ட்ரிக்கல் கடைக்காரர் வீட்டில் பணத்தை கொள்ளை அடித்த 3 பேர் கைது

ராயக்கோட்டையில் எலக்ட்ரிக்கல் கடைக்காரர் வீட்டில் பணத்தை கொள்ளை அடித்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-12-30 18:45 GMT

ராயக்கோட்டை

ராஜஸ்தான் மாநிலம் தாளி மாவட்டம் திப்பிலிகலா கிராமத்தைச் சேர்ந்தவர் ருக்காராம். இவரது மகன் கலுராம் (வயது 32). இவர் ராயக்கோட்டையில் உள்ள தக்காளி மண்டி அருகே எலக்ட்ரிக்கல் மற்றும் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவரது கடை தரைதளத்தில் அமைந்துள்ளது. 2-வது தளத்தில் கலுராம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 21-ந்தேதி கலுராம் கடைக்கு சென்று விட்டார். இவரது மனைவி யசோதா, குழந்தைகள் மீனா, கிருத்திகா ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது கலுராம் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் யசோதா மற்றும் குழந்தைகளை கத்தியை காட்டி மிரட்டி ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சங்கர் சிங், சுரேந்தர் சிங், லட்சுமணராம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.4.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்