பழனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

பழனியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-12-29 16:14 GMT

பழனி டவுன் போலீசார் நேற்று இரவு திண்டுக்கல் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது திருவள்ளுவர் நகர் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றுக்கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் பழனி இந்திராநகரை சேர்ந்த போலாஉசேன் மகன் முகமதுபைதா (வயது 21) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமதுபைதாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்