ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்த 3 பேர் கைது
கிருஷ்ணகிரி அருகே ஓட்டல் ஊழியர்களிடம் தகராறு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி அருகே அவதானப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டல் முன்பு கடந்த 21-ந் தேதி சிலர் காரை நிறுத்தினர். இதற்கு ஓட்டல் அருகில் உள்ள வெங்கடாசலம் என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஒருவர் வெங்கடாசலம் மீது காரை ஏற்றி சென்றார். இது தொடர்பான புகாரின் பேரில் கிருஷ்ணகிரி அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், அவதானப்பட்டியை சேர்ந்த வரதராஜன் என்கிற ராஜா (வயது55), நவீன்குமார் (25), விக்ரம் (22) உள்பட சிலர் நேற்று முன்தினம் ஓட்டலுக்கு சென்று ஓட்டல் ஊழியர்களை தாக்கி, சமையல் அறையை சேதப்படுத்தினர். இது குறித்து ஓட்டல் மேலாளர் முத்துராஜ் கே.ஆர்.பி. அணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வரதராஜன், நவீன்குமார், விக்ரம் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.