பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது
ஓசூரில் பணம் வைத்து சூதாடிய 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூர்
ஓசூர் சிப்காட் போலீசார் பேடரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த மவுனிசப்பா (வயது37), தேவாரெட்டி (50), சூர்ய நாராயணா (52), விஜி (60), ஹரியப்பா (35), சித்தய்யன் (60), ராஜா (55), சந்திரரெட்டி (48), மகேந்திரன் (50), மஞ்சுநாத் (39), முனி வெங்கடப்பா (53), பாப்பாரெட்டி (48) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.11 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.