காரை திருட முயன்ற 3 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே பழைய இரும்பு கடையில் காரை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-12-19 18:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் அருகே பழைய இரும்பு கடையில் காரை திருட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பழைய இரும்பு கடை

காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாசம்பட்டியை சேர்ந்தவர் சுந்தரராஜன் (வயது 41). பழைய இரும்பு வியாபாரி. இவர் கடந்த 17-ந் தேதி கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது கடைக்கு வந்த மர்ம நபர்கள் 5 பேர் கடையின் கேட்டை திறந்து உள்ளே புகுந்து அங்கிருந்த பழைய கார் ஒன்றை திருட முயன்றனர். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த நபர்கள் தப்பியோடினர். இதில் 3 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பியோடி விட்டனர். பிடிபட்ட 3 பேரையும் பொதுமக்கள் காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

அவர்கள் மிட்டஅள்ளியை சேர்ந்த ரஞ்சிதகுமார் (26), மூர்த்தி (46), பார்த்திபன் (21) ஆகியோர் என்பதும், தப்பியோடியவர்கள் கதிரிபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார் (24), மிட்டஅள்ளி எம்.எஸ். நகரை சேர்ந்த புகழ் (26) ஆகியோர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து ரஞ்சித்குமார் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் தப்பி ஓடிய 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்