கொடைக்கானல் அருகே கஞ்சா விற்றவர் கைது
கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.;
கொடைக்கானல் அருகே மன்னவனூர் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவரது பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் அவர், திருப்பூர் அருகே உள்ள ஆத்தூர் கொடிமம் கிராமத்தை சேர்ந்த வெள்ளத்துரை (வயது 50) என்பதும், தற்போது மன்னவனூர் பகுதியில் விவசாயம் செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.