ஸ்கூட்டரில் வைத்து கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஓசூர் அருகே ஸ்கூட்டரில் வைத்து கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்
ஓசூர் அருகே சின்ன எலசகிரி சாந்தபுரம் பகுதியில் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாவித்திரி, சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும் வகையில், ஸ்கூட்டருடன் வாலிபர் ஒருவர் நின்று இருந்தார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர், சின்ன எலசகிரியை சேர்ந்த சந்திரசேகர் என்ற அகோரா (வயது24) என்பதும், ஸ்கூட்டரில் வைத்து கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் ஸ்கூட்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.