கஞ்சா விற்ற வாலிபர் கைது
ஓசூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்
ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சீதாராம்மேடு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வாலிபரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் கஞ்சா வைத்து இருப்பது தெரிய வந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ஓசூர் ஆவலப்பள்ளியை சேர்ந்த முக்தியார் (வயது21) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.