பூவா? தலையா? நாணயத்தை சுண்டிவிட்டு சூதாட்டம்
வடமதுரை அருகே பூவா? தலையா? என்று நாணயத்தை சுண்டிவிட்டு சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள பிச்சம்பட்டி பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள முடிமலையாண்டி கோவில் அருகே 7 பேர் அடங்கிய கும்பல், நாணயத்தை சுண்டிவிட்டு பூவா? தலையா? என்று சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் பிச்சம்பட்டியை சேர்ந்த சின்னான் (வயது 29), ஆண்டிச்சாமி (30), சிவசக்தி (21), திருப்பதி (21), பாண்டி, புத்தூரை சேர்ந்த கிருஷ்ணன் (22), ராசு என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,080 பறிமுதல் செய்யப்பட்டது.