மனைவியை தாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது

ஓசூரில் மனைவியை தாக்கிய ரியல் எஸ்டேட் அதிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-19 18:45 GMT

ஓசூர்:

ஓசூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 48). ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி மரகதம் (45). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்தது. இது தொடர்பாக நேற்று முன்தினம் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராதாகிருஷ்ணன் மனைவியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து மரகதம், கணவர் மீது ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாகிருஷ்ணனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்