வாலிபர் கைது

பெட்டிக்கடைக்கு தீ வைத்த வாலிபர் கைது

Update: 2022-11-14 18:45 GMT

ராயக்கோட்டை

கெலமங்கலம் அருகே உள்ள டி.தம்மண்டரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா (வயது 33). இவரும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தா (22) என்பவரும்  கிரிக்கெட் விளையாடினர். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தா அப்பகுதியில் உள்ள முனியப்பாவின் பெட்டிக்கடைக்கு தீ வைத்தார். இதையறிந்த முனியப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைத்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கோவிந்தா தீ வைத்தது நான் தான் என கூறி தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக கெலமங்கலம் போலீசில் முனியப்பா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தாவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்