கஞ்சா விற்ற 2 பேர் கைது
உத்தனப்பள்ளி, நாகரசம்பட்டி பகுதியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி போலீசார் காவாப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே ஊரை சேர்ந்த சரவணன் (வயது 45) என்பவர் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோன்று உத்தனப்பள்ளி போலீசார் துப்புகானப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றதாக நல்லராலப்பள்ளியை சேர்ந்த மாதேஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரிடம் இருந்தும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.