கஞ்சா, குட்கா விற்ற 3 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர ரோந்து மற்றும் சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி தின்னூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் (வயது 28), நொகனூர் அருகே என்.கொத்தூரை சேர்ந்த நாகராஜ் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1¼ கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஓசூர் அட்கோ போலீசார் பெத்தகொள்ளு பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கடையில் குட்கா பதுக்கி விற்ற அசாம் மாநிலத்தை சேர்ந்த அஜித் குருமி (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.