வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது

வேப்பனப்பள்ளி அருகே வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-03 18:45 GMT

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஜொடுகொத்தூர் கிராமத்தில் வீட்டில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது மோகன் (வயது 29) என்பவர் வீட்டில் மதுபாட்டில் வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்