கஞ்சா விற்ற முதியவர் கைது
தர்மபுரியில் கஞ்சா விற்ற முதியவர் கைது செய்யப்பட்டார்.
தர்மபுரி 4 ரோடு பகுதியில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று இருந்த முதியவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் பள்ளப்பட்டியை சேர்ந்த பட்டுசாமி (வயது 62) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்து கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.