போடி அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது

போடி அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2022-09-22 18:20 GMT

போடி அருகே உள்ள முந்தல் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ்வரன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் 17 வயது சிறுமியை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களது காதலுக்கு சிறுமியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தநிலையில் விக்னேஷ்வரன், அந்த சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போடி குரங்கணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் விக்னேஷ்வரனை போலீசார் கைது செய்தனர். மேலும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக விக்னேஷ்வரனின் தாய் நாகஜோதி, அக்காள் பொன்னாத்தாள் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்